ஐ.நா காலநிலை மாற்ற உச்சிமாநாட்டில் கோட்டாபயவுக்கு எதிரான போராட்டம்!

ஸ்கொட்லாந்து கிளாஸ்கோவிலில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ இன்று பங்கேற்கவுள்ள நிலையில் உலகத் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டு கட்டிட வளாத்திற்கு எதிரே பிரித்தானியத் தமிழர்கள் ஒன்றுகூடி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராகக் கண்டனப் போராட்டம் ஒன்றை இன்று திங்கட்கிழமை முற்பகல் 11 மணியளவில் முன்னெடுத்துள்ளனர்.

இப்போராட்டத்தில் பிரித்தானயாவின் பல பகுதிகளிலிருந்து பேருந்துகள், மகிழுந்துகள், தொடருந்து மூலகமாக ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்று மனிதகுலத்திற்கு எதிராக படுகொலைகளை செய்த போர்க்குற்றவாளி கோட்டபாயவுக்கு எதிராக கோசங்களை எழுப்பியதோடு, பதாதைகளையும் தாங்கியிருந்தார்கள்.

இப்போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் புலம்பெயர் நாடுகளிலிருந்து வானூர்தி மூலம் பலர் கலந்துகொண்டிருந்தமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.



No comments