காபூல் இராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு! 19 பேர் பலி!!


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இராணுவ மருத்துவமனை வளாகத்தில் இரண்டு குண்டு வெடிப்புகள் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்தன.

முதல் குண்டுவெடிப்பு 400 படுக்கைகள் கொண்ட சர்தார் தாவுத் கான் மருத்துவமனைக்கு முன்பாகவும், இரண்டாவது குண்டுவெடிப்பு அருகிலேயே நடந்ததாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் காயமடைந்ததாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments