கொலைகளிலிருந்து வசந்த கர்ணகொடவிற்கு விடுதலை இல்லை!தமிழ் இளைஞர்களை கடத்தி கொலை செய்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கர்ணகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை விலக்கிக்கொள்ளுமாறான சட்டமா அதிபரின் கோரிக்கையை கொழும்பு விசேட நீதிமன்ற மேல் நீதிமன்ற நீதிபதிகள் இன்று (02) நிராகரித்துள்ளனர்.

சட்டமா அதிபர் தமக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை தொடரவோ அல்லது சாட்சியங்களை நடத்தவோ கூடாது என தீர்மானித்துள்ள நிலையில், சட்டமா அதிபருக்கு எதிராக நீதிமன்றில் ஆட்சேபனை வெளியிடப்பட்டது.

உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த பின்னர், குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் தொடர்பில் வழக்கு விலக்கப்படுவதானால், சட்டமா அதிபர் நேரில் ஆஜராக வேண்டும் அல்லது அவரது கையெழுத்துடன் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. 


No comments