வாயை மூடமாட்டேன்:முருத்தெட்டுவே ஆனந்த தேரர்இலங்கை அரசு தற்போது முன்வைத்துள்ள வரவு செலவு திட்டத்தையாவது நடைமுறைப்படுத்தாவிட்டால் இரு வருடங்களுக்குள் மக்கள் மத்தியில் இந்த அரசாங்கத்தின் மீதுள்ள வெறுப்பு மேலும் மேலும் அதிகரித்து அது மக்களின் வாக்குகளில் பிரதிபலிக்கும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின்  வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வரவு செலவு திட்டத்தில் விவசாய சமூகத்தின் நம்பிக்கை இறுதிவரை நிறைவேறவில்லை. இதனால் எம்.பி.க்கள் கிராமத்திற்கு செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாக முருத்தெட்டுவே தேரர் மேலும் தெரிவித்தார்.

மேலும், பதவி வழங்கப்பட்ட பின்பும் அரசாங்கத்தை விமர்சிப்பது பிரச்சினை இல்லையா என ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு, இலங்கை முழுவதையும் என்னிடம் ஒப்படைத்தாலும் என் வாயை மூட யாரும் இல்லை. நான் யதார்த்தமான உண்மையைப் பேசுகிறேன். இந்தப் பதவிகளைப் பாதுகாக்க நான் விரும்பவில்லை. நான் அதை விட நம் நாட்டையும் மக்களையும் மதிக்கிறேன் என்றார்.

இவரது வாயை மூட அண்மையில் கோத்தபாய வேந்தர் பதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments