மாணவி கொலை:கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!இன்று காலை கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக பாதசாரி கடவையை கடந்து சென்ற மாணவியை மூன்று வாகனங்கள் சேர்ந்து விபத்தை ஏற்படுத்தியதில் மாணவி  இறந்துள்ளார்.

இதனை கண்டித்தும் இறந்த மாணவிக்கு நீதி வேண்டியும் இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் தொடராமல் இருப்பதற்கு  மாபெரும் கண்டன போராட்டம் இன்று மதியம் 12 மணிக்கு கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்தர கனவோடு கிளிநொச்சியின் ஊற்றுப்புலம் கிராமத்திலிருந்து கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு வந்த மாணவியை பாடசாலை முன்பாக உள்ள ஏ-9 வீதியின் மஞ்சள் கோட்டில் இலங்கை பெரூந்துச்சபை போக்குவரத்து,மின்சாரசபை என மூன்று வாகனங்கள் மோதிக்கொன்றமை மக்களிடையே அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது.


No comments