யாழிலும் கொரோனா மரணங்கள்!பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இறந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நெல்லியடி முருகமூர்த்தி வீதியை சேர்ந்த 74 வயதுடைய முதியவரே கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

நோய் தொற்று அறிகுறிகளுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அவருக்கான அன்ரியன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் கொரோனா விடுதியில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்துள்ளார். குறித்த நபரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments