மீண்டும் துரையப்பா:மறவன்புலோ எச்சரிக்கை!

 

எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் ஒரு அல்பிரட் துரையாப்பாவாக உருவாகி வருவதாக தெரிவித்துள்ளார் மறவன்புலோ சச்சிதானந்தன்.

தமிழ மக்களை அமெரிக்கா சென்று சிறுபான்மையினமாக ஏற்றுக்கொண்டமையை அம்பலப்படுத்தி அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்  இலங்கையின் வட கிழக்கு தமிழரின் மரபு வழித் தாயகம். 

1987 இலங்கை இந்திய உடன்பாடு எற்றுக் கொண்டது. 2020 ஐநா மனித உரிமை ஆணையத்தில் இந்தியா இந்த நிலையை வலியுறுத்தியது.

சங்கிலியன் ஆண்ட தமிழ்த் தேசம், போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் தனியாக ஆண்ட தமிழ்த் தேசம் (ஒல்லாந்தர் காலத்தில் வன்னி தனிநாடாகக் கயிலாய வன்னியனின் தமிழ்த் தேசம் என்பதை ஆங்கியேப் பயணி உரோபோர்டு நொக்சர் படமாகக் காட்டினார்.) 1833 வரை ஆங்கியேர் தனியாக ஆண்ட தமிழ்த் தேசம்.

1833இல் சிங்கள தேசத்தோடு தமிழ்த் தேசத்தின் ஒப்புதலின்றி வலிந்து ஆங்கிலேயர் இணைத்த தமிழ்த் தேசம். தமிழ்த் தேசத்தை முதன்முதலாகக் கலைத்த அனைத்துலக ஏற்பு 1833இல். ஆங்கிலேயரின் 1833 இணைப்பை உடைத்ததே 1987இன் இலங்கை இந்திய உடன்பாடு. 

தமிழ்த்தேசம் தனியானது சிங்கள தேசம் தனியானது என்பதே 1987 உடன்பாட்டின் தொடக்க வரிகள். சிங்கள தேசம் ஏற்ற தொடக்க வரிகள். இந்தியா ஏற்ற தொடக்க வரிகள். 

தமிழ்த் தேசத்துக்கான அனைத்துலக ஏற்பு. அந்த ஏற்பை ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா வலியுறுத்த அந்த ஏற்பே ஐநா மனித உரிமைத் தீர்மானத்திலும் வரிகளாயின.

2021 கார்த்திகையில் அமெரிக்க அரசின் அலுவலகத்தில் தமிழ்த் தேசம் என்ற அனைத்துலக ஏற்பை மறுத்து, 1833 இணைப்பை மீண்டும் ஏற்றனர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் (TNA) பூமிப்பந்தின் தமிழர் அரங்கினரும் (GTF). 

இலங்கையில் தமிழ்த் தேசம் இல்லை, தமிழ்ச் சிறுபான்மையினரே உளர். என்பதை இரு சாராரும் ஏற்றனர். அமெரிக்க அரசின் கீச்சு வரிகள் படமாகப் பார்க்க.

இந்த ஏற்புக்கு முன்னோடியாக யாழ்ப்பாணத்தில் இலங்கைச் சிறுபான்மைக் கட்சிகளின் கூட்டம். அழைப்பாளர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்.

1960-70களில் அல்பிரட்டு துரையப்பாவின் நிலையே 2021இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணக் கூட்டத்திலும் அதன் பேச்சாளர் ஆபிரகாம் சுமந்திரனின் அமெரிக்க அரசு அலுவலகக் கூட்டத்திலும் நிலை. No comments