காலைவேளையில் கிளிநொச்சியில் கொலை!கிளிநொச்சி  பொலிஸ் பிரிவில் ஒரு பிள்ளையின் தந்தை இன்று காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி  பொலிஸ் பிரிவிலுள்ள பரந்தன் சிவபுரம் பிரதேசத்தில் 27 வயதுடைய முத்தையா கேதீஸ்வரன் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


No comments