மருந்தும் இல்லையாம்!இலங்கை அரசாங்க வைத்தியசாலைகளுக்கு மருந்துப் பொருட்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களை வழங்கும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு பல மாதங்களாக சுகாதார அமைச்சு பலகோடி ரூபாவை செலுத்தவில்லை என விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

பணம் செலுத்தாததால் மருத்துவப் பொருட்களுக்கு தங்கள் தயாரிப்புகளை வழங்குவதை நிறுத்திவிட்டதாகவும், நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளில் பல மாதங்களாக  அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாக உள்ளூர் விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

சுகாதார அமைச்சு பணம் செலுத்தாததால் தங்களது தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், சில விநியோகஸ்தர்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

No comments