தடுப்பூசி போடாத பணியாளர்கள் பணிநீக்கம்

 


பிரித்தானியாவில் தடுப்பூசி போடாத முன்னணி சுகாதார ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என சுகாதார செயலாளர் சஜித் ஜாவித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும தெரிவிக்கையில், 

பிரித்தானியாவில் NHSல் உள்ள அனைத்து முன்னணி சுகாதார ஊழியர்களும் வரும் 2022 ஏப்ரல் 1ஆம் திகதிக்குள் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவது உறுதி. 

தடுப்பூசி போடாத ஊழியர்களால் நோயாளிகளுக்கோ சக ஊழியர்களுக்கோ ஆபத்து ஏற்படும் நிலையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள முடியாது.

இதனால் பாரபட்சமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள், வரவேற்பாளர்கள் மற்றும் கிளீனர்கள் உட்பட அனைத்து முன்னணி NHS ஊழியர்களும் ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசியைப் பெற வேண்டும் அல்லது வேலை இழக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்

No comments