முன்னணியை தொடர்ந்து கூட்டமைப்பிற்கும் பரவியது!தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை தொடர்ந்து   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், தனக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த 14 நாள்களாக தன்னுடைய நெருக்கமாக இருந்தவர்கள், சுயதனிமைப்படுத்தி கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முன்னணியில் கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரனிற்கும் அண்மையில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில் அவர்கள் மீண்டிருந்தனர்.

No comments