முல்லைதீவில் காவல்துறை மரணம்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச பொலிஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், நேற்று (13) திடீரென உயிரிழந்துள்ளார்.

கேகாலை மாவட்டம், வரக்காப்பொல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய சுனில் ஜெயரத்தின என்ற உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடமையில் இருந்த வேளை மாரடைப்பு ஏற்பட்டு, புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

சடலம், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளது

No comments