அக்கா யோகேஸ்வரி: அம்பலமான கதைகள்
ஞானசாரருடன் கூட்டு சேர்ந்துள்ள யோகேஸ்வரியை அம்பலப்படுத்தியுள்ளார் சமூக பதிவர் ஒருவர் 

ஒரே நாடு ஒரே சட்டம் (One Country, One Law ) என்கிற தலைப்பில் சர்ச்சைக்குரிய  ஞானசார தேரர் தலைமையில் நியமிக்கப்பட்டு இருந்த ஜனாதிபதி செயலணிக்கு தமிழ் மக்களை பிரதிநித்துவ படுத்தி ஈ.பி.டி பி ஒட்டுக்குழுவை சேர்ந்த திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களை கோட்டாபய ராஜபக்சே நியமித்து இருக்கின்றார் .

திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்களின் கடந்த கால சாதனைகள் 

யாழ்ப்பாண மாநகரசபையின் முதல்வராக திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள்  யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில்   கட்டட தொகுதி ஒன்றை மாநகர சபைகள் கட்டளை சட்டத்திற்கும் நகர அபிவிருத்தி அதிகார சபை சட்ட விதிகளுக்கும் முரணாக அமைத்து இருந்தார் .

அதுமட்டுமின்றி குறித்த கஸ்தூரியார் வீதி கட்டட தொகுதி தொடர்ப்பன கேள்விப்பத்திரம் கோரல் முதல் அமைக்கப்பட்ட கட்டடத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு கொடுக்கப்பட்டது வரை பல கோடி ரூபா ஊழல் செய்து இருந்தார்  . 

குறிப்பாக மேற்குறித்த ஒப்பந்தம் சட்டவிரோதமான முறையில்   SMT Developers (PVT) LTD நிறுவனத்திற்கு ஈ பி டி பி அலுவலகமான ஸ்ரீதர் திரையரங்கில் வைத்து ஒப்பந்தம் வழக்கப்பட்டது முதல் ஈ பி டி பி அமைப்புக்கு சட்டவிரோதமாக கடைகள் வழக்கப்பட்டது வரையான மோசடிகளுடன் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் நேரடியாகவே தொடர்பு பட்டு இருந்தார் 

அதே போல யாழ்ப்பாண மாநகர சபைக்கு சொந்தமான  கட்டட தொகுதி ஒன்றின் மூன்றாம் மற்றும் நான்காம் மாடிகளில் ஈ பி டி பி அமைப்பு தங்களுக்கு சொந்தமான DD தொலைக்காட்சி நிறுவனத்தையும் மகேஸ்வரி நிதிய அலுவலகத்தையும் சட்டவிரோதமாக நடத்த அனுமதி வழங்கி இருந்தார் 

குறித்த தொலைக்காட்சி நிறுவனம் யாழ்ப்பாண மாநகரசபைக்கு செலுத்த வேண்டிய 10 லட்சம் ரூபா கூட வசூலிக்க படவில்லை 

யாழ்ப்பாண மாநகரசபையின் அங்கீகரிக்கப்பட்ட ஆளணிக்கு மேலதிகமாக 430 பேரை நியமனம் செய்து மாதம் தோறும் 6 மில்லியன் ரூபா பணத்தை அதாவது ஆண்டுக்கு 72 மில்லியன் ரூபா பணத்தை ஈ பி டி பி மோசடி செய்ய திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா காரணமாக இருந்தார் 

அதே போன்று யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல் காலத்தின் பொது முன்னாள் மாநகரசபை முதலவர் ஈ பி டி பி உறுப்பினர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து தனது பயன்பாட்டிற்கு என வாகனம்ஒன்றை கொள்வனவு செய்து இருந்தார் 

2013-2014 காலப்பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையில் இடம்பெற்ற முறையற்ற மின் இணைப்பாளர் மற்றும் மின் பொறியியலாளர் நியமனங்கள் தொடர்பான மோசடிகளுடன் தொடர்பு பட்டு இருந்தார் 

யாழ்ப்பாண மாநகர சபை நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட குளிர்சாதன பெட்டி சட்டவிரோதமான முறையில் தனது வீடு பாவனைக்கு கொண்டு சென்று இருந்தார்

இது போதனதென்று திருமதி  யோகேஸ்வரி பற்குணராஜா மேயராக இருந்த காலத்தில் மோசடி செய்த 549,000 ரூபாய் பணத்தை மீள ஒப்படைப்பதாக 2018 ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் இன்றுவரை மீள செலுத்தவில்லை 

ஆனால் இன்றும் யாழ்ப்பாண மாநகர சபையின் நிதி குழு உறுப்பினராக அங்கம் வகிக்கின்றார் 

இது தவிர, திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா அவர்கள் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி பி ஒட்டுக்குழு தலைமை முதல் அதன் உறுப்பினர்கள் வரை எல்லோர் மீது மணல் கொள்ளை வழக்குகள் இருக்கின்றன 

கொலை வழக்குகள் இருக்கின்றன 

கற்பழிப்பு குற்றசாட்டுகள் இருக்கின்றன . கடத்தல் வழக்குகள்  , ஊழல் மோசடி வழக்குகள் , விபச்சார வழக்குகள் இருக்கின்றன

அதாவது இலங்கையின் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட வேண்டிய  குற்றவாளி ஒருவர் தமிழ் மக்களை பிரதிநித்துவம் செய்து  மற்றுமொரு தண்டிக்க பட்ட குற்றவாளியான ஞானசார தேரர் தலைமையில் இலங்கையின் சட்டங்களை உருவாக்க போகிறார்

No comments