ஓய்வு பெற்றார் சிறீநிதி நந்தசேகரன்!யாழ்ப்பாணத்தில் நீதித்துறையில் முன்னுதாரணமாக பணியாற்றிய நீதிபதிகளுள் ஒருவரான சிறீநிதி நந்தசேகரன் மேல்நீதிமன்ற நீதிபதியாக ஓய்வு பெற்றுள்ளார்.இலங்கை படைகளால் மேற்கொள்ளப்பட்ட அல்லைப்பிட்டி படுகொலை மற்றும் வணபிதா .ஜிம்பிறவுண் அடிகளார் காணாமல் ஆக்கப்பட்டமைகளை வெளிக்கொணர முன்னின்று அவர்பாடுபட்டவர்.

அதே போல அல்லைப்பிட்டி மீது பலாலியிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகளால் கொல்லப்பட்ட மற்றும் காயப்பட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோரை காப்பாற்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த துணிகர நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தவர்களுள் அவரும் ஒருவராவார்.

வழக்குகளில் நீதியைத் தேடி வழங்கிய ஓய்வுபெற்றுச் செல்லும் நிஜமான நீதி தேவதை சிறீநிதி நந்தசேகரன் அவர்களிற்கு பலரும் பாராட்டை தெரிவித்துவருகின்றனர்.

தனது பணியின் முடிவுக்காலத்தை அம்பாறையில் அவர் ஆற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments