"தமிழ்பெண் பொதுவெளி: தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்" - நூல் வெளியீடு!

 "தமிழ்பெண் பொதுவெளி: தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்" - நூல் வெளியீட்டு விழா ஆய்வாளர் ந.மாலதி அவர்களின் 'எனது நாட்டில் ஒரு துளி நேரம்', 'விடிவிற்காய்', 'லத்தீன் அமெரிக்கா: இரத்தமும் நெருப்பும் கலந்த வரலாறு' வரிசையில் நிமிர் பதிப்பகம் வெளியீட்டில்  "தமிழ்பெண் பொதுவெளி: தமிழீழத்தில் அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும்" எனும் நூல்  தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனின் 67வது பிறந்த நாளான இன்று 26-11-2021 மாலை 5:30 மணியளவில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தாயகத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விசிக தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன், தவாக தலைவர் தோழர் பண்ருட்டி வேல்முருகன், மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கணேசமூர்த்தி, மதிமுக துணைப் பொதுச்செயலாளர் தோழர் மல்லை சத்யா, பேரா.சரஸ்வதி மற்றும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி ஆகியோர் நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்கள்.


No comments