பாரிசில் நடைபெற்ற தேசியத் தலைவரின் 67வது அகவைகாண் நாள்

பிரான்சில் பாரிஸ் லாச்சப்பல் பகுதியில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 67 ஆவது அகவை

நாள் கொண்டாட்டம் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது.

பிரான்சு நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் உருவப்படங்களின் முன்பாக கட்டிகை வெட்டிக்கொண்டாடப்பட்டது.

எமது மக்களோடு வெளிநாட்டவர்களும் அகவைநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கட்டிகை மற்றும் இனிப்பு உண்டு மகிழ்ந்தனர்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்குத் தேசியத் தலைவரின் வர்ணப் படங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

லாச்சப்பல் மற்றும் பிரான்சின் ஏனைய இடங்களிலும் தேசியத் தலைவர் அவர்களின் அகவை நாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments