சாரதி அனுமதிப்பத்திரம் கோரியதற்கு மிரட்டல்!இலங்கையில் தனது சாரதி அனுமதிப் பத்திரத்தை சோதித்த பொலிஸ் அதிகாரியை திட்டிய சம்பவம் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒருவர் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.

செயலாளரும் அவரது மனைவியும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, பொலிஸ் அதிகாரி ஒருவர், தகவல் பெறுவதற்காக, அவரது சாரதி அனுமதிப் பத்திரத்தை கேட்டுள்ளார்.

இதன்போது, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்று கூறிக்கொள்ளும் அந்த நபரும், அவரது மனைவியும், பொலிஸ் அதிகாரியை திட்டியுள்ளனர்.

இந்த சம்பவத்தை, குறித்த அதிகாரி, மற்றவர்களுக்கு தொலைபேசியில் தெரிவிப்பதையும் வீடியோவில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments