ரிமோட் உடன் போனாலும் புலிகளாம்?

 
கதிர்காமத்தில் தொலைக்காட்சியின் ரிமேற் கொன்ரோலுடன் மட்டக்களப்பை சேர்ந்த இரு இளைஞர்களை சந்தேகத்தின் பேரில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கைது செய்துள்ளதாக கதிர்காமம்  பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தைச் சேர்ந்த இரு நண்பர்கள் தாம் கொக்கட்டிச்சோலை கோவிலுக்கு மோட்டர் சைக்கிளில் சென்று வருவதாக தெரிவித்து நேற்றைய தினம் வீட்டை விட்டு வெளியேறி கதிர்காமத்துக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கதிர்காமத்து பொலிஸ் சோதனைச் சாவடியில் சம்பவதினமான நேற்று இரவு இராணுவத்தினர் வீதிச் சோதனையில் இவர்களை நிறுத்தி சோதனையிட்டபோது இவர்களின்  பையில் றிமோட்கொன்ரோல் மற்றும் பற்றி, ரோப்ரோல்கள் இருப்பதைகண்டு சந்தேகத்தில்  23 வயதுடைய மனேகர் கிசோக், 23 வயதுடைய கிருபைரெட்ணம் சதுர்சன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

 பையில் வீட்டின் உள்ள தொலைக்காட்சியின்  ரிமோட் கொன்ரோலை சகோதரன் விளையாட்டிற்காக குறித்த பையில் ஒழித்து வைத்திருந்த நிலையில் அந்தபையில் உடுப்புக்களை எடுத்துவந்துள்ளதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுNo comments