கொரோனா அட்டை:வவுனியாவிலும் கட்டுநாயக்காவிலும் தேவை!



வவுனியா பிரதேச செயலகத்தினுள் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களை  மாத்திரமே அனுமதிக்க முடியும் என பிரதேச செயலர் அறிவித்துள்ளார். 

பிரதேச செயலக வாயிலில் அது தொடர்பிலான அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. 

பிரதேச செயலகத்தினுள் சேவை பெற வருவோர் அடையாள அட்டையையும் , தடுப்பூசி அட்டையையும் கைவசம் வைத்திருக்க வேண்டும் என்றும் , தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதோர் பிரதேச செயலகத்தினுள் அனுமதிக்கப்பட்ட மாட்டார்கள் என அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது.

இதற்கெதிராக நெட்டிசன்கள் பொங்கிவருகின்றனர்.

இதனிடையே தென் கொரியாவில் இடம்பெறும் ஐக்கிய நாடுகள் சுற்றாடல் மாநாட்டில் பங்கேற்பதற்காக செல்வதற்கு நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்கவை விமானத்தில் பயணிக்க அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

கொவிட் தடுப்பூசியை செலுத்திக் கொண்டமைக்கான அட்டையை எடுத்து வராத காரணத்தினால் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் குறித்த அட்டையின் புகைப்படம் ஒன்றை வட்ஸ்அப் ஊடாக பெற்றுக் கொண்டு அதனை காண்பித்ததன் பின்னர் அவருக்கு பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது


No comments