இங்கிலாந்தில் திங்கள் முதல் இராணுவத்தினரால் எரிபொருள் விநியோகம்!!


இராணுவத்தினர் எதிர்வரும் திங்கள்கிழமை முதல் இங்கிலாந்து முழுவதும் கேரேஜ்களுக்கு எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருட்களை வழங்கத் தொடங்குவார்கள் என்று பிரித்தானிய அரசாங்கம் கூறுகிறது.

பெண்கள் உட்பட ஏறக்குறைய 200 சேவையாளர்கள் தற்போதைய நெருக்கடியைச் சாமாளிக்க உதவவுள்ளார்கள்.

300 வெளிநாட்டு எரிபொருள் கொள்கலன் ஓட்டுநர்கள் மார்ச் இறுதி வரை இங்கிலாந்தில் வேலை செய்ய முடியும் என்றும் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த இரு வாரங்களாக எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து எரிபொருள் நிரப்பியதால்  எரிபொருள் விநியோகம் தடைபட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments