ரோகித்த ராஜபக்சவின் பூனையை தேடி காவல்துறை!மகிந்த ராஜபக்சவின் மகன் ரோகித்த ராஜபக்சவின் பூனையை தேடி கண்டுபிடித்து தருமாறு காவல்துறை அதிபரிற்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டமை கவனத்தை ஈர்த்துள்ளது. ரோகித்தவின் மனைவியினால்; வளர்க்கப்பட்ட செல்லப்பிராணியான பூனை காணாமல் போயுள்ளதால் குடும்பத்தினுள் முறுகல் ஏற்பட்டுள்ளதாம்.

குறித்த பூனையை கண்டுபிடித்து தருவோருக்கு பரிசுத் தொகையை வழங்க அவர் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பூனை கடத்தப்பட்டுள்ளதாகவும் அதனை கண்டுபிடித்து தர காவல்துறை அணியொன்றை நியமிக்கவும் காவல்துறை அதிபருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளது.No comments