போதைபொருள் வியாபாரம்:புலிகளை கோர்த்துவிடும் இந்தியா!

விடுதலைப்புலிகளை போதைப்பொருள் கடத்தல்காரர்களாக்க இலங்கை இந்திய புலனாய்வு அமைப்புக்கள் மும்முரமாக செயற்பட தொடங்கியுள்ளன.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாகக் கூறி, தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) நேற்று கைது செய்துள்ளதாக தகவல்கள் சிங்கள ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட வழக்கில், சென்னை, வளசரவாக்கத்தில் வசித்து வந்த இலங்கைப் பிரஜையான இவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்பினர் என தெரியவந்துள்ளதாக அவை குறிப்பிட்டுள்ளன.

ஏற்கனவே கடலில் கைதான தமிழக மீனவர்களிற்கும் புலிச்சாயத்தை வழமை போலவே இந்தியாவின் இந்து பத்திரிகை பூசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments