இராணுவ இருப்பிற்கு மீண்டும் பூச்சாண்டிகள்?

வடகிழக்கில் இராணுவ பிரசன்னத்தை நிறுவுவதில் இலங்கை அரசு தனது எடுபிடிகள்  சகிதம் மும்முரமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு என்ற பேரில் படையினர் மீண்டும் மக்களிடையே களமிறக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் படையினர் சகிதம் நள்ளிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே கிளிநொச்சி தர்மபுரம் கல்லாறு கிராமத்தில் தொடர்ச்சியாக குழுக்கிடையிலான மோதல்,வாள் வெட்டு சம்பவங்கள் ,சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று காலை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சுற்றிவளைப்பில் பொலீஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்.இராணுவத்தினர். இணைந்து குறித்த சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர்.குறித்த சுற்றிவளைப்பில் 01 வாள், கசிப்பு, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, ஆவணங்கள் இன்றிய நிலையில் காணப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலீஸார் மீட்டதுடன் சந்தேகத்தின் பேரில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தோட்டங்களுள் நுழையும் வனவிலங்குகளை கட்டுப்படுத்த வன்னியில் பரவலாக நாட்டுத்துப்பாக்கிகள் விவசாயிகளிடம் பயன்பாட்டிலுள்ளமை குறிப்பிடத்தக்கது,No comments