முல்லைத்தீவில் துப்பாகி ரவைகள் மீட்பு! ஒருவர் கைது!


முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணை பகுதியில், ரி.56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தக்கூடிய  401  ரவைகளை வீட்டில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் நேற்றிரவு  கைதுசெய்துள்ளனர்.

முல்லைத்தீவு பெருங்குற்றத்தடுப்பு பிரிவி காவல்துறையினர் குறித்த வீட்டில் கஞ்சா இருப்பதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதை தொடர்ந்து நேற்றிரவு (14)  அந்த வீட்டினை சோதனை செய்தபோது வீட்டு வளாகத்தில் ஒருதொக துப்பாக்கி ரவைகளை மீட்டுள்ளார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் வயல் நிலத்தினை பண்படுத்தும் போது இந்த ரவைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் எதுவும் வழங்கப்படாத நிலையிலேயே வீட்டின் உரிமையாளரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளார்கள்
 
கைதுசெய்யப்பட்ட நபரை இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

No comments