தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரி வீர உரை!!

இலங்கை நாடாளுமன்றம் தற்போது ஏட்டிக்கு போட்டியான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களது வீர உரைகளால் நிரம்பிப்போயுள்ளது.

இன்று சுமந்திரனின் செல்லப்பிள்ளை சாணக்கியன் போராடப்போவதாக விடுத்த அறிவிப்பு கவனத்தை ஈர்த்துள்ளது.

" அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்

அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில் நாங்கள் சந்தித்து பேசியிருந்தோம். நாங்கள் அவர்களை சந்தித்து பேசும் போது, அவர்கள் அமர்வதற்கு கதிரைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனினும் நாங்கள் வலியுறுத்தி அவர்கள் அமர்ந்து பேச கதிரைகளை பெற்றுக்கொடுத்தோம். அவர்களை நாங்கள் சந்தித்து பேசும் போது, சிறைச்சாலை ஊழியர்களும் அருகில் இருந்தமையினால் பல விடயங்களை பேச முடியவில்லை. எனினும் அவர்கள் தங்களை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எங்களிடம் தெரிவித்தனர். ஆனால் தன்னிடம் அப்படி அவர்கள் கூறவில்லை என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் எங்களிடம் அதனைத் தெரிவித்தார்கள். அதேபோன்று நடைபெற்ற சம்பவத்திற்கு நீதிஅமைச்சர் மன்னிப்பு கோரியமையினை நாங்கள் வரவேற்கின்றோம்.

இதேவேளை, அண்மையில் சில அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முகப்புத்தகத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அதில் தமிழரசுக்கட்சி வாலிப முன்னணி உறுப்பினர் சோபணன் என்பவரும் அடங்கியுள்ளார். இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது  இவர்கள் அனைவரின் விடுதலைக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம்".

No comments