விவசாயிகள் வீதியில்:கோத்தா செயலாளர் கொமிசனில்!



இலங்கை முழுவதும் விவசாயிகள் போராட்டம் உச்சமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் இருந்து உர கொள்வனவு செயற்பாட்டில் 29 கோடி ரூபாவை , ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அழுத்தங்களை பிரயோகித்து தனிப்பட்ட வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதாக தெரியவந்துள்ளது.

குறித்த முறைகேட்டை அம்பலப்படுத்திய ‘அருண’ ஞாயிறு வாரவெளியீட்டினை முடக்க அரசு மும்முரமாகியுள்ளது.

இதனிடையே வெளியான செய்தியானது உண்மைக்கு புறம்பானது என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தொடர்பில் அனைத்து தரப்பினரிடமும் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி செயலாளர் பொலிஸ்மா அதிபரை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னைய மகிந்த ஆட்சியில் நிதி மோசடிகளில் ஈடுபட்டதாக தண்டனை அறிவிக்கப்பட்ட பீ.பி.ஜயசுந்தர கோத்தபாய ஜனாதிபதியாகிய பின்னர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


No comments