புளொட் கொலைகளையறிந்த சாட்சியம் மரணம்!


தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் அன்று முதல் இன்று வரை இருந்த ஒரே மத்திய குழு உறுப்பினரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற் கட்சியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு பங்காளிக் கட்சியுமான - ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி கட்சியின் செயலாளருமான - 'ஆனந்தி அண்ணர்' என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சதானந்தன் அவர்கள் நேற்று ஒக்ரோபர் மாதம் 22ஆம் திகதி, வெள்ளிக்கிழமை, சுகவீனம் காரணமாக காலமானார். இவருடைய இறுதிக் கிரியைகள் யாழில் நடைபெற்றது.

1945 மே 16இல் யாழ் .உடுப்பிட்டி கொம்மாந்துறையில் பிறந்தவர்.

தேசிய தலைவர் மற்றும் ஆரம்ப காலப்போராளிகள் பதுங்கியிருந்த மண்ணே கொம்மாந்துறையாகும்.  

புளொட் அமைப்பினுள் நடைபெற்ற பல்வேறு பிரச்சினைகளையும் நன்கு அறிந்துகொண்டிருந்த போதும், அவற்றை மௌனமாகக் கடந்து சென்றவர் ஆனந்தி. அன்று அவர் அவற்றை விமர்சிக்க முற்பட்டு இருந்தால் அவர் சில தசாப்தங்களுக்கு முன்னரேயே காலமாகி இருப்பார் இல்லையேல் வெளிநாட்டில் அரசியல் தஞ்சம் பெற்றிருப்பார். ஆரம்பத்தில் சந்ததியாருடன் நெருக்கமாக இருந்தமையாலும் சந்ததியார் படுகொலை செய்யப்பட்டதையடுத்து இவரையும் உமாமகேஸ்வரன் கண்காணிப்பில் வைத்துக்கொண்டார். அதன் பின்னர் ரகுமான் ஜான் உட்பட தீப்பொறி குழுவினார் வெளியேறிய போதும் ஆனந்தியும் கண்காணிக்கப்பட்டார். அதன் பின்னாக ஆனந்தியும் தவிர்க்க முடியாமல் உமாமகேஸ்வரனின் விசுவாசியானார். அவர் புளொட்டில் நடைபெற்ற அத்தனை அராஜகங்களையும் மௌனமாக சகித்துக்கொண்டார். கடைசியில் உமா மகேஸ்வரனதும் மாணிக்கதாசனதும் கொலைகளைக் கூட ஏற்கனவே அறிந்திருந்தும் அவற்றை மௌனமாகவே கடந்து சென்றார். 

ஆனந்திக்கு பிள்ளைகளும் இல்லாததால் அவரும் அவருடைய துணைவியாரும் இளம் போராளிகளை தங்கள் பிள்ளைகளாக கருதியதும் உண்டு. அவ்வாறான ஒரு வருடன் ஆனந்தி மரணமடைவதற்கு சில தினங்களுக்கு முன் உரையாடி உள்ளார். அந்த உரையாடலில் காந்திய காணி தொடர்பாகவும் உமா மகேஸ்வரனதும் மாணிக்கதாசனதும் படுகொலைகள் தொடர்பாகவும் சம்பந்தப்பட்டவரையும் கடந்து செல்லுமாறு கேட்டுக்கொண்டிருக்கின்றார். மாணிக்கன்தாசனின் மெய்பாதுகாவலரான சிவா, புளொட் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களான பவான் மற்றும் ஆர்.ஆர்(தராகி சிவராம் கொலையாளி) ஆகியோரும் காந்திய காணி பற்றிய உரையாடலை அறிந்து வைத்துள்ளனர். மேலும் இந்திய றோ முகவரான வெற்றிச்செல்வன் எழுதும் பல புரட்டுகளுக்கு ஆனந்தி அவர்கள் பதில் எழுத ஆரம்பித்துள்ளதாகவும் கூறி இருக்கின்றார். இன்றைய புளொட் அமைப்பின் அச்சாணியாக இருக்கின்ற ஆர்.ஆர்(தராகி சிவராம் கொலையாளி) ரோ வெற்றிச் செல்வனின் வரலாற்று புரட்டுகள் பற்றிய திரிபுகளுக்கான பதிலை வெளியிடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என கட்சி ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். 


No comments