கொஞ்சும் கோத்தாவும்: காணாமல் போன பூனையும்!

காணாமல் போன தமது பிள்ளைகளை தேடி தமிழ் தாய்மார் அலைந்து திரிந்து கொண்டிருக்கையில்  தனது மகனது பூனைக்குட்டியை தேடி மகிந்த அலைந்தமை சிங்கள ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இலங்கை காணாமல் போனோர் தொடர்பான ஜெனீவா ஆணையத்திடம், காணாமல் போனவர்கள் தொடர்பான ஆணையம் மேலும் செயல்படுத்தப்படும் என்றும், அவர்களின் இறப்பு சான்றிதழ்கள் மற்றும் இழப்பீடு தொடர்ந்து வழங்கப்படும் என்றும் உறுதி வழங்கியுள்ளது.

எனினும் அவ்வாறு எதனையும் செய்திராத நிலையில் யதார்த்தம் பொய்யாக இருப்பதனை அம்பலப்படுத்தியுள்ளனர்.

இதனிடையே காணாமல் போன குழந்தைகளிற்காக வடகிழக்கில் மக்கள் வீதிகளில் நீதி கோரி போராடும் வேளையில் தனது பேரக்குழந்தையை கொஞ்சும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் கோத்தபாய.
No comments