நவராத்திரி விரதம் :விழிப்பு தேவை!இந்துக்களின் நவராத்திரி விரதம் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது எனவே பொதுமக்கள் கட்டுப்பாடுகளை மீறாது தமது வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும் அத்தோடு பொதுமக்கள் தங்களை பாதுகாப்பதோடு தங்களுடைய சமூகத்தையும் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது.

தற்போதுள்ள இயல்பு நிலையினை உதாசீனம் செய்யாது சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு யாழ் மாவட்ட செயலர் க.மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் ஒருபோதும் பொது முடக்கத்துக்கு வழிவகுக்காது இயல்பான நிலையினை பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார்.


No comments