கொழும்பில் ஒரு பேச்சு:யாழில் இன்னொரு பேச்சு!


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கொழும்பில் கூட்டமைப்பினயும் யாழ்ப்பாணத்தில் ஏனைய தமிழ் கட்சிகளது தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.

கொழும்பில் கூட்டமைப்புடனான சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது.

நேற்யை தினம் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் பல்வேறுபட்ட தரப்பினர்களுடனும் சந்திப்பில் ஈடுபட்டார். யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு இந்த சந்திப்பு இடம்பெற்றது.


இதன் போது இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

சந்திப்பில்,வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சுரேஸ் பிரேமச்சந்திரன், யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்திருந்தார்.


No comments