மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற இரு அமெரிக்கர்கள்!!


உலகளவில் ஒவ்வொரு துறைகளிலும் சாதனை படைக்கும் நபர்களுக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்றைய தினத்தில் இருந்து வருகிற 11 ஆம் திகதி வரை அறிவிக்கப்படுகிறது.

அந்த வகையில், நடப்பு ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுபவர்கள்  குறித்து இன்று  அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டம் பட்டாஹவுடியன் ஆகியோர் மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெறுகிறார்கள்.  வெப்பம், உடல் வலியை தொடாமல் உணரும் சென்சார் கருவியை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு இவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

No comments