மாவையே தலைமை:சிக்கலிற்கு தீர்வு!

நாளை  ஞாயிற்றுக்கிழமையும் நாளை மறுதினம் திங்கட்கிழமையும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ள போராட்டங்களிற்கு தலைமை தாங்க மாவை முன்வந்துள்ளதாக தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது.

வழமையாக ஓடிக்கொண்டிருக்கின்ற வாகனத்தில் தொற்றிக்கொள்ளும் தமிழரசு மாவை அணி எம்.ஏ.சுமந்திரனின் தனி ஆவர்த்தன போராட்டத்தில் தொற்றிக்கொண்டுள்ளது.

ஆனாலும் இதுவரை மீனவர்களது பிரச்சினைகள் பற்றியோ போராட்டம் பற்றியோ தம்முடன் ஏதும் எம்.ஏ.சுமந்திரன் பேசியிருக்கவில்லையென பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

பங்காளி கட்சிகளும் இதே நிலைப்பாட்டுடன் விலகி நிற்கின்றன.

ஆனாலும் எம்.ஏ.சுமந்திரன் இத்தகைய தரப்புக்கள் எவற்றினதும் ஆதரவை பெறாது எவ்வாறு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் என்பதும் தெரியவில்லையெனவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையிலேயே தற்போது நேற்றிரவு நள்ளிரவு தாண்டி நடைபெற்ற காணொலி வழி கூட்டத்தின் பிரகாரம் மாவை தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  


No comments