போதைப்பொருள் கடத்தல்கார கும்பலின் தலைவர் பிடிபட்டார்!!


கொலம்பியாவின் மிகவும் தேடப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரும் நாட்டின் மிகப்பெரிய குற்றவியல் கும்பலின் தலைவருமான ஓட்டோனியல் என அழைக்கப்படும் டயிரோ அன்டோனியோ அஸுகா பிடிபட்டனர்.

நேற்று சனிக்கிழமை இராணுவம், விமானப்படை மற்றும் காவல்துறையினரின் கூட்டு நடவடிக்கையின் போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டோனியலின் தலைக்கு அல்லது அவர் இருக்கும் இடத்தைப் பற்றிய தகவல்களை வழங்கவோருக்கு $ 800,000 (£ 582,000) வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது, அதே நேரத்தில் அமெரிக்கா அவரது தலைக்கு $ 5 மில்லியன் பரிசு அறிவித்திருந்ததது.


கொலம்பிய அதிபர் இவான் டியூக் தொலைக்காட்சி செய்தியில் ஓட்டோனியலின் பிடிப்பட்டதைப் பாராட்டினார்.

இந்த நூற்றாண்டில் நம் நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான மிகப்பெரிய அடி இது என்று அவர் கூறினார். இந்த அடி 1990 களில் பப்லோ எஸ்கோபரின் வீழ்ச்சியுடன் ஒப்பிடத்தக்கது என்றார்.

பனாமாவின் எல்லைக்கு அருகில், வடமேற்கு கொலம்பியாவில் உள்ள அந்தியோகியா மாகாணத்தில் உள்ள கிராமப்புற மறைவிடத்தில் ஓட்டோனியல் பிடிபட்டார். இந்த நடவடிக்கையில் காவல்துறை அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக கொலம்பிய அதிபர் கூறினார்.


கொலம்பியாவின் ஆயுதப் படைகள் பின்னர் அதன் வீரர்கள் கைவிலங்குடன் ஒட்டோனியலைப் பாதுகாக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டனர்.

சமீபத்திய ஆண்டுகளில் 50 வயதான நபரைப் பிடிக்க ஆயிரக்கணக்கான அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பல பெரிய நடவடிக்கைகள் நடந்துள்ளன, ஆனால் இப்போது வரை எதுவும் வெற்றிபெறவில்லை.

No comments