சத்தமின்றி யாழ்ப்பாணத்தில் புத்தர் நடமாடுகிறார்!யாழ்ப்பாணத்தில் சத்தம் சந்தடியின்றி பௌத்தமயமாக்கல் முனைப்பு பெற்றுள்ளது. நாவற்குழி விகாரை விஸ்தரிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்து சிங்கள மயமாக்கலை அரசு முடுக்கியுள்ளது.

இதேபோன்றே புங்குடுதீவு குறிக்கட்டுவான் பகுதியை சிங்கள மயமாக்குவதில் அரசு மும்முரமாகியுள்ளது.

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்தினை தரிசிக்க தினமும் குறிகட்டுவான் வழியாக பல பக்தர்கள் நயினாதீவு செல்கிறார்கள்.

குறிக்கட்டுவான் மற்றும் நயினாதீவு பயணம் எவ்வாறிருக்கின்றதென்பதை அம்பலப்படுத்தியுள்ளார் செயற்பாட்டாளர் ஒருவர்.

யாழ் இருந்து செல்லும் போக்குவரத்து பாதை குறிகட்டுவானை அடைந்ததும் இலங்கையின் பொறுப்பான திணைக்களம் ஒன்றால் நாட்டப்பட வழிகாட்டும் பலகையில் நாக விகாரை என்று மட்டுமே வழிகாட்டப்பட்டுள்ளது.

அதையும் தாண்டி உள்ளே போனால் குறிகட்டுவான் துறையில் பௌத்த பதாதைகள் சிங்களத்தில் மட்டுமே காணப்படுகிறது.

அதைவிட்டால் படகில் எவ்வளவோ பயணிகள் நயினை நாக பூசணிக்கு பயனிக்க ஏறி இருந்தாலும் ஓரிரண்டு சிங்களவர்களுக்காக படகு நாகவிகாரைக்கு சென்று தரித்த பின் தான் பல நூறு நாக பூசணிக்கான பயணிகளை அங்கு கொண்டு சேர்கிறது. பகதர்கள் பலர் சினந்து கொள்கிறார்கள்.

இவ்விடயஙகளில்  என்ன  கூறுகிறேன் என்றால் இது மத நல்லிணக்கத்தினை குழப்பும் பதிவல்ல விழிப்புணர்வு பதிவு. 

ஒரு வழிகாட்டும் பலகையில் இரண்டு ஆலயங்களையும் ஏன் பொறிக்கவில்லை?. 

வரலாற்று சிறப்பு வாய்ந்த இடத்தில்(குறிகட்டுவான் துறையில்) ஏன் தனியே பௌத்த அடையாளங்கள் மட்டும் காணப்படுகிறது?

நயினாதீவினை தனியே  சிங்கள பௌத்த நாகவிகாரைகுரிய சிங்கள  தீவாக காட்டும் மனோநிலையா இது?

இவற்றை எம் யாழ்பாண  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏன் கவனம் செலுத்தவில்லை.

மக்கள் வாக்கு போட்டது இவற்றையெல்லாம் கவனிக்க தான்!

இன அடையாளங்கள் மிக முக்கியமானவை

மக்கள் தங்கள் பிரச்சனைகெல்லம் தாங்களே போராடுவதென்றால் உங்களை வாக்கிட்டு அனுப்பியது எதற்கு.! என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


No comments