21,22 ஆசிரியர்கள் புறக்கணிப்பு!

 


இலங்கை அரசு மூடப்பட்ட பாடசாலைகளை 21ம் திகதி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ள நிலையில் எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

அத்துடன் 25ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு செல்லவும், மாற்று தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதியிலிருந்து படிப்படியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இலங்கை பிரதமருடன் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிவுற்ற நிலையில் தமது போராட்டங்கள் தொடருமென  ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.


No comments