காணி அபகரிப்பு!! மக்கள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!!


கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி, கிளாலிக் கிராமத்தில் கடற்படைக்கு வழங்குவதற்கென காணி அளவீடு செய்யச் சென்ற நில அளவைத் திணைக்களத்தின் அதிகாரிகள், பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து, காணி அளவீடு செய்யாமல் திரும்பிச் சென்றுள்ளனர்.

கிளாலி கிராமத்தில், கடற்படைக்கென 05 ஏக்கர் காணி வழங்குவதற்கு, நில அளவைத் திணைக்களம் அளவீடுகளைச் செய்வதற்கு, இன்று (18) காலை, கிளாலி கிராமத்துக்குச் சென்றனர்.

தகவல் அறிந்து ஒன்றுகூடிய அப்பகுதி மக்கள், நில அளவை முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நில அளவைத் திணைக்கள அதிகாரிகளை திருப்பி அனுப்பியுள்ளனர்.

பொதுமக்களின் இந்த எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், உப தவிசாளர் கஜன், உறுப்பினர் வீரபாகுதேவர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

No comments