போராட்டகளத்திற்கு செல்கிறார் சுமா சேர்!இலங்கை அரசிற்கு நொந்துவிடக்கூடாதென அமைதி பேணிய எம்.ஏ.சுமந்திரன் போராட்ட களமிறங்கவுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களின் றோலர் மீன்பிடி முறையின்  காரணமாக வடக்கு மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, மீனவர்களுக்கு நீதி கோரி முல்லைத்தீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல்வழி கண்டனப்போராட்டமொன்றை வருகிற ஞாயிற்றுக்கிழமை ஆக்டொபர் 17ம் திகதி நாடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளதுடன் இப் போராட்டத்தில் வந்து கலந்துகொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அழைப்புவிடுத்துள்ளார்.

நாட்டில் நிலவும் கொரோனா பெருந்தொற்றை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளுக்கிணங்க இப் போராட்டம் நடத்தப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் அரசியலல்வாதிகள் மீனவ கிராமங்களிற்கு வருகை தரதடைவிதித்து மீனவ அமைப்புக்கள் அறிவிப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments