பெல்சியத்தில் இடம்பெற்ற தியாக தீபத்தின் நினைவேந்தல்

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் நினைவு கூறல் எழுச்சிகரமாக பெல்சியத்தில் இடம்பெற்றது.

தமிழர்களுடைய பூர்வீகத் தாயகத்தின் விடுதலை வேண்டி 5 அம்சக் கோரிக்கைகளினை இந்திய  அரசிடம் முன்வைத்தவாறு தியாகி லெப் கேணல் திலீபன் அண்ணா 26.09.1987 அன்று யாழ்ப்பாணம் நல்லூர் முன்றலில் 12 நாட்கள் நீர் ஆகாரம் அன்றி அதி உச்ச தியாகத்தினை புரிந்தார்.  தமிழீழ விடுதலைக்காக நாம் வரித்துக்கொண்ட கொள்கை மாறாமல் அறவழியில் நின்று போராடி வீரச்சாவினைத் தழுவிக்கொண்டு இன்றும் மக்கள் புரட்சி வெடிக்க சுதந்திரத் தமிழீழம் மலர பெரும் வரலாற்றுப் பசியோடு காத்திருக்கும் உன்னதனையும் தமிழீழ வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கர்  அவர்களையும் பெல்சியம் வாழ்மக்கள் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தனர்.

No comments