வாறார்! வாறார்!! மஹிந்த வாறார்?

 


யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பான குடிநீரை வழங்கும் இரண்டு முக்கிய நீர் திட்டங்களை ஆரம்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஒக்டோபர் 6 ஆம் திகதி பயணம் செய்யவுள்ளார்.

முன்னைய நல்லாட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் முடங்கயிருந்த தாழையடியில் கட்டப்படும் கடல் நீரை நன்னீராக்கும் திட்டத்தை தொடங்கிவைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்றே முடங்கியிருக்கும் யாழ்.நகர நீர் விநியோகத் திட்டத்தினையும் அவர் ஆரம்பித்து வைக்கவுள்ளதாக தெரியவருகின்றது.ஏற்கனவே 284 கி.மீக்கு நீளமுள்ள குழாய்கள் புதைக்கப்பட்டுள்ள போதும் இரணைமடு குளத்தில் நீரை பெறமுடியாமை காரணமாக திட்டம் முடக்கமடைந்துள்ளது.


No comments