பிரான்சு நெவெர் நகரில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்
பிரான்சின் புறநகர்ப் பகுதியான நெவெர் நகரில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26.09.2021 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
நெவெர் தமிழ்ச் சங்கம், தமிழ்ச்சோலை மற்றும் நெவெர் தமிழ் இளையோர் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றலைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர்வணக்கத்தோடு அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு சுமந்த பிரெஞ்சு மொழி, தமிழ் மொழியிலான பேச்சு, கவிதை போன்ற நிகழ்வுகளை நெவெர் தமிழ்ச்சோலை மாணவர்கள் வழங்கியிருந்தனர்.
Post a Comment