கற்கையிலிருந்த சிறுமி சடலமாக மீட்பு!



மட்டக்களப்பு நகர பகுதியில் உள்ள அரசடி, பொற்கொல்லர் வீதியில் வீடொன்றிலிருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுமி, மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 கல்வி பயிலும் 13 வயது சிறுமியென பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி Zoom ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தனது உயிரை மாய்த்துள்ள நிலையிலிருந்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.


No comments