வடக்கில் தவிசாளர்களை துரத்தும் கொரோனா!

வல்வெட்டித்துறை நகரசபை,சாவகச்சேரி பிரதேசபை,கரைச்சி பிரதேசசபை தவிசாளர்களை தொடர்ந்து  வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.

உடல் நிலையில் மாற்றம் உணரப்பட்டதையடுத்து கோப்பாய் பொதுசுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு அன்டிஜன் பரிசோதனை நேற்று (05) ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில் அவர் குடும்பத்துடன், இல்லத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

No comments