மீண்டும் கோத்தாவின் வெள்ளைவான்:அரச அமைச்சர் கூறுகிறார்?
கோட்டாபய ராஜபக்சவின் வெள்ளை வான்கள் மீண்டும் ஓடத்தொடங்கியுள்ளதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன என்பவர் விளக்கமளித்துள்ளார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெள்ளைவான் கலாசாரம் தலைத்தூக்குமென கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது பிரசாரம் செய்யப்பட்டது. அதற்காக முதலைக்கண்ணீர் வடித்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் படம் காட்டப்பட்டது. முன்னாள் சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றிய இருவர் சிறையில் உள்ளனர்.
பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அவரசகாலச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
உண்மையால், வெள்ளைவான் கலாசாரத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகிக்கின்றார். என்ன? கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியாமல் வீடுகளிலேயே இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றுவதற்கு படையினர் வெள்ளை வான்களிலேயே செல்கின்றனர்.
அவ்வாறு வெள்ளைவான் கலாசாரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே மாற்றியுள்ளார். அவ்வாறு வெள்ளைவான்களில் சென்று தடுப்பூசியை ஏற்றாவிடின், வீடுகளுக்குள்ளே முடங்கியிருப்போரின் நிலைமை என்னவாகியிருக்கும் என்றும் அவர் வினவியுள்ளார்.
Post a Comment