அனுராதபுரம் சிறை: அனைத்தும் உண்மை –மனோ!


அனுராதபுர சிறைச்சாலையில் தமிழ் கைதிகளை கொலை செய்ய ராஜாங்க அமைச்சர் முற்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை ,காவிந்த ஜயவர்தன எம்பி, ரோஹன பண்டார எம்பி சகிதம் சந்தித்ததாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியை தயார் நிலையில் மதுபோதையில் அமைச்சர் வைத்திருந்து வெடித்திருந்தால் அமைச்சரை கொல்ல முற்பட்ட புலிகளை சுட்டுக்கொன்றதாக கதை எழுதப்பட்டிருக்குமென கைதிகள் தெரிவித்ததாக மனோகணேசன் தெரிவித்துள்ளார்.


இதனிடையே வேறு இரு கைதிகளை தான் அமைச்சர் மிரட்டியதாக பொய் நாடகமொன்றை அரங்கேற்ற முற்படுவதாக தகவல் கிட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக சுமார் அரை மணி நேரம் தாமதிக்கப்பட்டே தாம் அனுமதிக்கப்பட்டதாகவும் அனுமதி மறுக்கபட்டிருந்தால் சிறை முன் போராட்டத்தில் குதித்து அனுமதியை பெற்றிருக்கவும் தயராக இருந்ததாக தெரிவித்த மனோகணேசன் சொன்னவுடன் திரும்பி செல்ல தான் சோணங்கியல்லவெனவும் தெரிவித்தார்.

முன்னதாக முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் அனுமதி மறுக்கபட்டதையடுத்து திரும்பியிருந்தமை தெரிந்ததே.  


No comments