கொடிகாமத்தில் கத்திக்குத்து!! ஒருவர் மருத்துவமனையில்!!


கொடிகாமம் பகுதியில் வேன் ஒன்றில்  வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் , ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

கொடிகாமம் கரம்பகம் பகுதியை சேர்ந்த ஒருவரே கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிற்றூர்தி ஒன்றில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் நேற்று புதன்கிழமை இரவு 08 மணியளவில் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது 

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments