யேர்மனியில் சேதமடைந்த 51 மில்லியன் யூரோக்கள்!!


யேர்மனியின் மத்திய வங்கி சேதமடைந்த 51 மில்லியன் யூரோக்களைப் பெற்றுக்கொண்டதாக அறிவித்துள்ளது. 

கடந்த யூலை மாதம் யேர்மனியில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் நீர், எண்ணெய், கழிவு நீர், மற்றும் சேற்றினால் பாதிக்கப்பட்ட யூரோ நாணயத்தாள்களைப் பெற்றிருந்தது.

யேர்மனி மத்திய வங்கிய ஆண்டு ஒன்றுக்கு 40 மில்லியன் சேதமடைந்த யூரோக்களை பெறுவது வழங்கம். இம்முறை அது 10 மில்லியனால் அதிகரித்துள்ளது.

யேர்மனியில் சேதமடைந்த பணம் உலர்த்தப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, பின்னர் மெயின்ஸில் (Mainz) உள்ள ஒரு மையத்தில் போலி மற்றும் சேதமடைந்த பணத்தை பகுப்பாய்வு செய்கிறது.

இந்த ஆண்டு, ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் இறுதி வரை மேற்கு ஜெர்மனியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 51 மில்லியன் டாலர் மதிப்புள்ள பணத்தாள்களை இந்த மையம் பெற்றுள்ளது.

யேர்மனியில் 180 க்கும் மேற்பட்டோர் இறந்தனர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் காயமடைந்தனர் என்பது நினைவூட்டத்தக்கது.


No comments