சிறையில் சாணக்கியன்:கிழக்கில் லோஹான்!


 

இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தையால் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்டதை தொடர்ந்து  எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன்  ஆகியோர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்று  விஜயம் செய்துள்ளனர்.

ஏற்கனவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அனுராதபுரம் சிறைக்கு பயணித்திருந்த நிலையில் இன்று எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன்  ஆகியோர் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு பயணித்திருந்தனர்.

இதனிடையே பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களுக்கான கூட்டம் இராஜாங்க அமைச்சர் லொகான் ரக்வத்தே தலைமையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான காரியாலயத்தில் கூட்டம் நடைபெற்றுள்ளது.அநுராதபுர சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியற் கைதிகளை முழந்தாலிட வைத்து தலையில் தன்னுடைய கைத்துப்பாக்கியை வைத்து சுட போவதாக அச்சுறுத்தியவர் லொகான்.எனினும் அவர் வகித்த இராஜாங்க அமைச்சர் பதவியினையும் இராஜினாமா செய்திருந்தார். 

தமிழ் கைதிகளை சுட ச் சென்ற ஒருவரை மட்டக்களப்பிற்கு அழைத்து முதல் மரியாதை வழங்கியிருக்கிறார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் அமைப்பாளர் சந்திரகுமார் ஆகியோர் என கிழக்கு தகவல்கள் தெரிவிக்கிறன. அத்துடன் த.ம.வி.பு கட்சி தலைவர் பிள்ளையானும்  தமிழ் இளைஞர்கள்ர்களின் நெற்றியில் துப்பாக்கி வைத்தவரை மட்டக்களப்பில் கொண்டுவந்து செங்கம்பள வரவேற்பு கொடுத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.


No comments