இலங்கை காவல்துறைக்கு நேரமில்லையாம்புதுக்குடியிருப்பு பொலிசாரால் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் தர்மலிங்கம் நவநீதன் மற்றும் முருகுப்பிள்ளை பார்த்தீபன் உள்ளிட்ட இருவருக்கும் தியாகதீபம் திலீபன் அவர்களுடைய நினைவேந்தல் நிகழ்வு செய்ய நீதிமன்றம் ஊடாக தடையுத்தரவை பெற்றுக்கொண்டுள்ளனர்.

முன்னதாக தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு காவல்துறை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் ஊடாக நால்வருக்கு தடையுத்தரவு பெற்றுக்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தவுள்ளார் என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக முல்லைத்தீவு காவல்துறை நேற்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்குப் பதிவுசெய்திருந்தனர்.

அதனடிப்படையில் காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை ஆராய்ந்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு நால்வருக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த தடையுத்தரவில் முல்லைத்தீவு காவல்துறை பிரிவிற்குள் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்த இராசையா பார்த்தீபன் என்பவர் தொடர்பில் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்தவுகள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென முல்லைத்தீவு காவல்துறை அறிக்கை செய்துள்ளனர்.

No comments