யாழில் முன்னேற்றம்:மாவட்ட செயலர்!யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று 213 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 13 ஆயிரத்து 944 பேர் மாவட்டத்தில் இன்று வரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இறப்புக்களை பொறுத்தவரை 274 ஆக அதிகரித்துள்ளது அதேநேரம் 5641 குடும்பங்கள் யாழில் தனிமைப்படுத்தலில் உள்ளதாகவும் க.மகேசன் தெரிவித்துள்ளார். 


No comments