யாழில் தேசிய சிறைக்கைதிகள் தினம்!தேசிய சிறைக் கைதிகள் தினத்தை முன்னிட்டு தமிழ் அரசியல் கைதிகளது வாழ்வில் வெளிச்சம் வர சுடரேற்றி பிரார்த்திக்கப்பட்டுள்ளது.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அவர்கள் இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி எனும் தலைப்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரிலுள்ள குரலற்றவர்களின் குரல் அலுவலகத்தில் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் சகிதம் தற்போதைய முடக்க நிலையை கருத்தில் கொண்டு இப்பிரார்த்தனை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.


No comments